கார்த்திகை பாண்டியன் சந்திப்பு
எழுத்தாளர் கார்த்திகை பாண்டியன் காரைக்குடி மரப்பாச்சி சந்திப்பிற்காக கோவையிலிருந்து ஜனவரி26 காலை காரைக்குடி வந்து சேர்ந்தார். மெய்யப்பா விடுதியில் காலை ஓய்வுக்கு பிறகு கவியரசு நேசனும் நானும் அவருடன் சேர்ந்து கொண்டோம். காலையுணவு முடித்து மூவருமாக அரியக்குடி கோவிலுக்கு சென்றோம். கானாடுகாத்தான் வழியாக திருமயம் சென்றோம். திருமயம் கோவில் நடை மூடியிருந்தது. மொத்த பயணமும் சுவாரசியமான உரையாடல்களால் நிரம்பியிருந்தது. மொழிபெயர்ப்பு விமர்சனம் வாசிப்பு சூழல் குறித்து பலவிஷயங்களை பகிர்ந்தார். மதிய உணவிற்கு பின் மாலை கூடுகை தொடங்கியது. மொத்தம் பதினாறு பேர் பங்கு கொண்டார்கள். பிரபாகரன் ஏன் அபத்தத்தை எழுத வேண்டும் எனும் கேள்வியுடன் விவாதம் தொடங்கியது. வாசகருக்கு ஒரு நிலைகுலைவை அமைதியின்மையை ஏற்படுத்தினால் என் கதைகள் வெற்றிபெற்றவை என்றார் காபா. அந்த தரிசனத்தை மரணத்தின் மீதான அச்சத்தின் வழியாகவும் பாலியல் சிக்கல்கள் வழியாகவும் அடைந்ததாக குறிப்பிட்டார். எனது ஆக்கங்கள் எல்லோருக்குமானவை அல்ல. அது வெகு சிலரை சென்று தொட்டால் போதும். அதுவே என் எதிர்பார்ப்பு என்றார். டாக்டர். ரவி கேட்ட...