Posts

Showing posts from March, 2020

மரப்பாச்சி கூடுகை எண் 22 - எழுத்தாளர் எஸ்.செந்தில்குமாருடன் சந்திப்பு

Image
எழுத்தாளர் எஸ். செந்தில்குமார் போடியைசொந்த ஊராக கொண்டவர். 2002 ஆம் ஆண்டு முதல் தமிழ் இலக்கிய சூழலில் இயங்கி வருபவர். இதுவரை ஆறு நாவல்கள் ஏழு சிறுகதை தொகுப்புகள், இரண்டு கவிதை தொகுப்புக்கள், சில தொகை நூல்கள் என தீவிரமாக இயங்கிவருபவர். ஆனாலும் அறியப்படாத எழுத்தாளர் என்றே சொல்ல வேண்டும். அவருடைய அண்மைய நாவல் 'கழுதைப் பாதை' சில ஆண்டுகள் உழைத்து உருவாக்கப்பட்ட படைப்பு. 1948-67 வரையிலான காலத்தில் நாவல் நிகழ்வதாக செந்தில்குமார் கூறினார். இதுவரையிலான மரபாச்சி எழுத்தாளர் சந்திப்புகள் ஒரு எழுத்தாளரின் அதுவரையிலான எல்லா படைப்புகளுக்கு உரியதாகவே இருந்துள்ளன. ஒரேயொரு படைப்பிற்கு கூட்டம் நடத்துவது இதுவே முதல்முறை.  நேற்று (1-3-20) இந்த நாவலுக்காக ஒரு கலந்துரையாடல் மற்றும் வாசிப்பு அரங்கை காரைக்குடி மரப்பாச்சி இலக்கியவட்டம் சார்பாக காவேரி மருத்துவமனையில் ஒருங்கிணைத்தோம். எஸ். செந்தில்குமார் மதியம் ஒன்றரை மணிக்கு வந்து சேர்ந்தார். உணவு உண்டு சிறிது ஓய்வெடுத்த பின்னர் மூன்றரை மணிக்கு நிகழ்வுக்கு வந்து சேர்ந்தோம். நேற்றைய கூடுகையில் பதினாறு பேர் பங்கு கொண்டார்கள். இக்கூடுகைக்காக ஐந்து